கொட்டகை அமைத்தல்
எருமை மாடுகள் வளர்க்க எளிய கொட்டகை அமைப்பே போதுமானது. ஓரிரு எருமைகள் வைத்திருப்போருக்கு எளிய அமைப்பே போதுமானது. அல்லது ஏற்கெனவே இருக்கும் கொட்டிலையே சிறிது மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
கொட்டகை
அளவுகள்
1. நீளம் : 3.6 மீ (தீவனத் தொட்டி 0.9 -1.8 மீ உயரம்)
2. அகலம் : 1.3 மீ / ஒரு வருடத்திற்கு
3. உயரம் : 8 மீ முன்னால், சுவற்றுக்குப் பின்னே 1.8 மீ, ஒரு பக்கத்தீல் செங்கல் மற்றும் சிமெண்ட்டாலான காரை 0.9 மீ அளவு அதற்கு மேல் நிலை.
4. தூண்கள்
செங்கல் மற்றும் சிமெண்ட்டாலான (அ) மூங்கில் அல்லது கிடைக்கும் எளிய மரங்களையும் பயன்படுத்தலாம்.
5. தரை
மட்டமான கல் அல்லது சிமெண்ட கான்கிரீட் ஒருபக்கம் சரிவாகவும், சொரசொரப்பான தரையாக இருக்கவேண்டும். மேலும் கொட்டில் தரை, தரையிலிருந்து 1 அடி உயரமாவது இருக்கவேண்டும்.
6. கூரை
தட்டச்சு, ஓடுகள் அல்லது ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகளை பயன்படுத்தலாம்.
இளம் எருமைகள் மற்றும் கன்றுகள் கொட்டகை
இரண்டு, மூன்று கன்றுகள் மட்டும் இருந்தால், அதை எருமைகளுடன் விட்டு விடலாம். அதிகமான எண்ணிக்கையில் கன்றுகள் இருந்தால் அவற்றிற்கு தனியே கொட்டில் அமைக்கவேண்டும். ஒரு எருமைக்கு 3-3.5 மீ2 அளவு இடம் தேவை. அதே போல் ஒரு கன்றுக்கு 2.5 மீ2. எருமைகள் பெரும்பாலும் தனித்தனியே கட்டப்படுவதில்லை. அவைகள் பொதுவாக சுதந்திரமாக விடப்படுகின்றன.
(ஆதாரம்: www.vuatkerala.org)
கோடை காலங்களில்
எருமைகள் வெயில் காலங்களில் சற்று சிரமப்படும். இது அடர்ந்த கருமை நிறத் தோலையும், சில வேர்வை சுரப்பிகளையும் பெற்றுள்ளது. இவை அதிகம் நீரை விரும்பும் என்றாலும் இவை வெயிலையும் தாங்கி வாழும் திறன் படைத்தவை. இது உட்கொள்ளும் உணவைப் பாலாக மாற்றுவதால் இதன் உடல் எப்போதுமே சூடாகவே இருக்கும். எனவே தான் நீரில் குளிர்வடைய அதிகம் விரும்புகின்றன. கீழ்க்கண்ட கருத்துக்கள் எருமை வளர்த்தலில் முக்கியமானவை ஆகும்.
- கொட்டகையைச் சுற்றிலும் நிறைய நிழல் தரும் மரங்களுடன் எப்போதும் சுற்றுப்புறம் தூய்மையாகவும், குளிர்ச்சியுடனும் இருக்கவேண்டும்.
- ஆறு அல்லது குளத்திலிருந்து எடுக்கப்பட்ட குளிர்ந்த நீர் எப்போதும் மாடுகளுக்கு அளிக்கப்படவேண்டும். தண்ணீர் தொட்டியை எப்போதும் நிழலில் வைத்திருக்கவேண்டும்.
- நிறைய மரங்கள் நிறைந்த புல்வெளி மேய்ச்சலுக்கு ஏற்றது. ஆனால் மரங்களை எருமைகள் சேதப்படுத்தாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
- வெறும் கூரையினால் மட்டும் வேயப்பட்ட எளிய அமைப்பு கோடை (வெயில்) காலங்களில் சிறந்தது. சுற்றுச் சுவர்கள் சரியான காற்றை அளிக்காமல் அடைத்துக் கொள்வதுடன் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வளர்வதற்குத் துணைபுரிகிறது. மழை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க வைக்கோல், மூங்கில் போன்ற பொருட்களாலான திரைகளைத் தொங்கவிடுதல்.
- எருமைகளுக்கு தினமும் நீர்க்குளியல் அவசியம். நீர் தெளித்தல், கழுவுதல் அல்லது நீரில் (குளம், குட்டை) உலவ விடுதல்.
- மேய்ச்சலுக்கு வெயில் நேரங்களில் அழைத்துச் செல்லாமல் காலை மற்றும் மாலை வேளைகளில் அழைத்துச் செல்வது நல்லது.
கோடை கால கொட்டகை
குளிர்காலங்களில்
- மழை, பனி, குளிர் காற்றிலிருந்து பாதுகாக்குமாறு மூன்று பக்கத் தடுப்புச் சுவருடன், ஒரு பக்கம் திறப்பாக இருக்கவேண்டும்.
- திறந்த பகுதியில் கதவு போட்டிருத்தல் வேண்டும்.
- அதிகக் குளிர்வீசும் காலங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக இருந்தால் வெப்பம் தரக்கூடிய வெப்பக் கட்டிடம் அவசியம்.
கன்றுக் கொட்டில்
- முதல் மாதம் வரை கன்றுகள் தனியே பராமரிக்கப்படவேண்டும். கன்றுக் கொட்டில் சுத்தம் செய்ய எளிதானதாக இருக்கவேண்டும். மேலும் சூரிய ஒளி, காற்று, மழையிலிருந்து கன்றைப் பாதுகாக்கும் வண்ணம் இருத்தல்வேண்டும்.
- கன்றுகளைத் தனித்தனியே பராமரிக்கும் போது அது சரியாகத் தீவனம் எடுக்கிறதா என்பதையும் அதன் வளர்ச்சி பற்றியும் அறிய முடிகிறது. நோய் பரவல் தடுக்கப்படுகிறது.
- தண்ணீர் கன்றுகளுக்கு எளிதில் கிடைக்குமாறு இருக்கவேண்டும். வாளிகளுடன் ஆள் இருக்கவேண்டும்.
- படுக்கை அமைப்புகளான வைக்கோல் போன்ற அடிக்கடி ஈரமானால் நோய்க்கிருமிகளுக்கு இடமளிக்கின்றன. எனவே அவ்வப்போது அவற்றை மாற்றவேண்டும். கன்றுகளுக்கு கலப்பு அல்லது சமச்சீர் தீவனம் முறையாக வழங்கப்படவேண்டும்.
கன்றுக் கொட்டில்
(ஆதாரம்: www.milkproduction.com) |